Friday, 16 June 2023

Stages of girls experience

 #அமுதநிலை_2


ஒரு பெண்ணில் அமாவாசை முதல் பௌர்ணமி வரை அமுத நிலையானது தலையில் இடது பக்கத்திலிருந்து கீழ் நோக்கி நகரும் பாதம், விரல்கள் என மையம் கொள்ளும் அடுத்து பௌர்ணமி முதல் அமாவாசை வரை வலது பக்கம் மேல் நோக்கி தலை'க்கு செல்லும் இதில்

முக்கியமான ஒரு நிகழ்வு உண்டு பெண்ணின் மூலாதாரத்தில்

நெருப்போடு அமுத நிலை கலக்கின்றது 

அதாவது 

அமுத நிலையை சூரியன் இயக்குகின்றது


ஒரு பெண்ணின் பெரினியத்தை அக்கினிப் பாண்டம் என்கிறோம் படைப்பாற்றலின் குண்டமாக பாத்திரமாக செயல்படுவதால்

அங்கே உஷ்ணம் உற்பத்தியாகிறது

இந்த அக்கினி என்பது எத்தகையது என்று பார்த்தால் அது ஒரு எண்ணெய் விளக்கைப் போன்றது.

திரிபோட்டு, எண்ணெய் விட்டு ஏற்றப்பட்ட விளக்கு எவ்வாறு எரிந்து வெப்பம் தருகிறதோ அதுபோன்றே பெரினியத்தின் உள்ளே விளக்கின் அழல் போல் கனல் தோன்றி அங்கே வெப்ப சக்தி உண்டாகிறது.


நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல இந்த வெப்பசக்தி பெண்ணில் உடலில, பூப்பெய்தும் நாளிலிருந்து சுயம்புவாக உருவாகுவது

இது தொடர்ச்சியாக உருவாகும் இதுதான் மூலாதாரத்தின் மூண்டெழுகனல்.

என குறிப்பிடப்படுகிறது.

சூரியன் சுயம்புவாக, தனக்குள் தானே உட்கருவினையால் ஒரு அக்கினிப் பொறியை உண்டாக்கி,

அந்த ஆரம்பப் பொறியைக்கொண்டு தன்னுள் அக்கினியைத் தொடர்ந்து மூட்டி;மூட்டி கொழுந்தாய் ஜ்வாலை விட்டு எரியும்படியான நெருப்பு வளர்க்கும் ஆற்றல் மிக்கது


அதாவது தன்னுள் தானே ஆற்றலை உருவாக்கிப் பெருக்குவது என்கிற ஆற்றல் வித்தை என்பது சூரியனது தனிப்பெரும் குணாதிசயம். பிரபஞ்சத்தின் அண்ட பகிரண்டங்களுக்கும் ஆற்றல் வழங்குவது யாரென்றால்

அது சூரியனே.

இலக்கியங்களும் அறிவியலும், ஆன்மீகமும் ஒருசேர ஓர் அணியில் நின்று ஆமோதிக்கும் ஒப்பற்றப் பேராண்மை இது.

பிரபஞ்சத்தில் 20 பில்லியன் சூரியக்குடும்பங்கள் இருப்பதாகவும் அவற்றில் ஒரு சூரிய குடும்பத்தில் உள்ள பூமியில் நாம் வாழ்வதாகவும் சொல்லப்படுவது நாமறிந்த உண்மையே.


ஆக, பிரபஞ்சத்தின் ஆற்றல் பிரதிநிதியான சூரியனது ஆற்றல் ஜனனத்தின் இயக்கம்.

இந்த இயக்கம் மனிதகுலத்தின் ஆற்றல் பிரதிநிதியான பெண்ணின் மூலாதாரத்தில் தத்ரூபமாய் நிகழ்கிறது. ஆனால் உஷ்ணம் பரவும் முறையில் பெண் சூரியனிலிருந்து வேறுபட்டவள். சூரியனது வெப்பமானது சூரியனிடம் மட்டுமே நில்லாமல்,

பிரபஞ்சம் முழுவதிலும் பரவுவதன் காரணம்  சூரியன் தன் அச்சில் தானே சுழன்று கொண்டு பெரு நீள்வட்டப் பாதையில் அண்ட வெளியில் சுழலுகிறது என்பதால் தான் 


இப்பொழுது ஒரு காட்சியை உங்கள் கற்பனையில் ஓட்டிப் பாருங்கள்,

'ஒரு அக்கினிப் பாண்டம் இருக்கிறது  அதில் அக்கினி தொடர்ந்து உற்பத்தியாகிறது.

அவ்வாறு அந்தப் பாண்டத்தில் உருவாகும் அக்கினியின் வெப்ப ஆற்றலானது அப்பாண்டத்திலிருந்து வெளியேறாமல் சுற்றிலும் பரவி விநியோகம் செய்யப்படாமல் இருக்குமேயானால் என்னவாகும் என எண்ணிப் பாருங்கள்.'

உருவாகும் வெப்பம் அங்கேயே தங்கி செறிவடையும் அல்லவா......?!


இப்போது இன்னொன்றைச் சிந்தியுங்கள்,

ஒரு இடத்தில் வெப்பம் தொடர்ந்து உற்பத்தியாகும் ஒருநிலையில், அந்த வெப்பம் அங்கிருந்து வெளியேற்றப்படாமல் அங்கேயே தங்கிச் செறியுமானால், என்னவாகும்..?

அங்கு, அப்பாண்டத்தில் போடும் பொருட்களும், அப்பாண்டத்தைச் சுற்றியுள்ள பொருட்களும் சுருங்கி, வெந்து, வறண்டு, உலர்ந்து, கருகி எனப் பல்வாறானும் பாதிக்கப்படுமல்லவா? ஏன்...?

தீக்காயங்களும்; தீவிபத்துக்களும் கூட நிகழுமே.

பொருட்களும் ஏன் அந்த பாண்டமே கூட வெடித்தும் சிதறுமே!

ஆக, ஓரிடத்தில், வெப்பசக்தி செறிவடையுமேயானால் பற்பல இணைவிளைவுகள் நிகழும் என்பது வெள்ளிடைமலை.


பெண்ணின் மூலாதாரக்கனல் இவ்வாறுதான் அவளது பெரினியம் எனும் உற்பத்திஸ்தானத்தினுள் செறிகின்றது.

இவ்வாறு அந்த அக்கினி அங்கேயே செறிகிறது எனபதை நீங்கள் உணரவேண்டும் என்றால், பெண்ணின் உடலியல் விஷயங்களை நீங்கள் கவனிக்கவேண்டும்.

பெண்ணின் மூலாதாரத்தில் அக்கினி சேருகிறது என்பதற்குப் பல அடையாளங்கள் உள்ளன.


கவனியுங்கள் 

முதலாவது அடையாளம்

பெண்ணின் ஆசனவாய்

(குதம் அல்லது மலப்புற வழி)

வெப்ப நிலை ஆணின் ஆசன வாயின் வெப்பநிலையைவிட சுமார் 0.5 டிகிரி கூடுதலான சூட்டுடன் இருக்கும்.

(எங்கள் வகுப்பறைகளில் நாங்கள் தப்பாமல் காணுகிற காட்சி  ஒன்றிலிருந்து ஒன்றரை மணிநேரம் ஒரு வகுப்பில் ஒரு சேர ஒரு மாணவி அமர்ந்துவிட்டு எழுந்தாள் என்றால், அவள் அமர்ந்திருந்த இருக்கை தகிக்கும். ஒருவகுப்பு முடிந்து இன்னொரு வகுப்பு வரும்போது ஒரு பெண் மாணவி அமர்ந்து விட்டு எழுத்துச்சென்ற இருக்கையில் ஒரு மாணவன் வந்து அமர நேரிட்டால் அவனுக்கு தெரியும் அந்த அதிக வெப்பம்).


2வது அடையாளம்

மலச்சிக்கல் ஆணைவிடப் பெண்ணுக்கே அதிகம் ஏற்படுகிறது.

ஐந்து பெண்களுக்கு ஒரு ஆண் என்கிற விகிதாச்சாரத்தை மலச்சிக்கல் வியாதியில் காணமுடியும்.

பெண்ணின் ஆசனவாய் சுருகி இறுகி அதனால் ஏற்படும் மலச்சிக்கல் வகையைப் பெண்களிடம் காணமுடியும் ஆணின் மலச்சிக்கல் வகை பெரும்பாலும் செரிமானக் கோளாறுகளால் ஏற்படுவதாக இருக்கிறது


3வது அடையாளம்

ஆசன வாயின் வழியே வெளியேறும் வாயு ஆணைக்காட்டிலும் பெண்ணுக்கு அதிக உஷ்ணத்துடன் அதிக அடர்த்தியுடன் வெளிவருகிறது. ஏனெனில் பெண்ணுக்கு உடலில் ஆணை விட அதிக மீத்தேன் வாயு உண்டாகிறது

மீத்தேன் வாயுவை இயற்கை வாயு (Natural Gas) என்பர்.

இந்த இயற்கை வாயு வெப்ப ஆற்றலும்

மின் ஆற்றலும் கொண்டது. பெண்ணினுள்ளே எத்தனை வெப்பச் செறிவு நிகழ்கிறது என்பதற்கு இது ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டு.


4வது அடையாளம்

நாசியின் வழியே வெளிவிடும் மூச்சு, ஆணின் வெளிவிடும் மூச்சை விட சுமார் 0.5 டிகிரி கூடுதலாக உள்ளது. பெண்ணின் உள்வாய் வெப்ப நிலை ஆணின் உள்வாய் வெப்ப நிலையை விட சுமார் 0.6 டிகிரி கூடுதலாக இருக்கும்.


5வது அடையாளம்

பெண் ஆணைவிடவும் குறைவாகவே வியர்ப்பாள் (வியர்வை என்பது சுற்றுச்சூழலின் வெப்ப அளவு அதிகமாகும்போது உடலின் வெப்பம் அதிகரிக்க, அந்த அதிகரிப்பைக் குறைத்து, சாதாரண இயல்பான உடல்வெப்ப நிலைக்கு உடலை மீண்டும் வரவழைக்கவென உடலில் உண்டாகும் குளிர்விப்பு இயக்கமாகும்.

இந்த பெண்ணின் உடல் வெப்ப நிலை ஆணின் உடல் வெப்ப நிலையைவிட சுமார் 0.3 டிகிரி அதிகம் என்பதால், அவளது உடலை இயல்பு நிலைக்கு கொண்டுவர குறைவான அளவு வியர்வையே போதும்,)


6வது அடையாளம்

உடலில் தசை இல்லாத நிலையிலும், பெண் ஆணைவிடவும் அதிகநேரம் தளராது சீராக வேலை செய்வாள்.


7வது அடையாளம்

பெண் எந்த ஒரு செயலையும் வெகு அகல ஆழ்ந்து ஆராய்ந்து,

வெகு சிரத்தையோடு,

கடும் நுணுக்கங்களை முதலீடு செய்து செய்வாள்.


8வது அடையாளம்

பெண் ஆணைவிடவும் அதிக எச்சரிக்கை விழிப்புடன் இருப்பாள்.

தூக்கத்திலும் கூட அவளுக்கு விழிப்புணர்வு மிகுந்திருக்கும். வீட்டுக்குள் ஏற்படும் மிகச் சன்னமான ஒளிமாற்றத்தைக்கூட தூங்கிக்கொண்டிருக்கும்போதே கூட அவளால் உணரமுடியும். ஹைப்போதலமஸ் எனப்படும் பிடரியில் உள்ள பின்மூளைப்பகுதியும் மூளைத்தண்டும் இணையும் பகுதி உடல் வெப்பத்தைக் கண்காணிக்கும்

அதிபதி பெண்ணுக்குச் சற்றே கூடுதல் நுணுக்கத்துடன் இந்த ஹைப்போதலமஸ் அமைக்கப்பட்டிருக்கிறது.

இதே பகுதிதான் விழிப்புணர்வுக்கும், ஹார்மோன்களுக்கும் பொறுப்பான பகுதியாகும்.

எனவே, உடல் வெப்பமும் விழிப்புணர்வும் தொடர்புடையவை எனக் காண்க.


9வது அடையாளம்

பெண்ணின் செவிப்பறை வெப்பம் ஆணின் செவிப்பறை வெப்பத்தைவிட 0.3 டிகிரி கூடுதலாக இருக்கும்.

இந்த வெப்ப அதிகரிப்பால் அவளது செவிப்பறை சவ்வு மெலிதாய் நன்கு விரிந்து இறுக்கமாய் இருப்பதால் மிக மிக சன்னமான ஒலியையும் பெண்ணால் உணரமுடியும்.


10வது அடையாளம்

பெண்ணின் நரம்பு மண்டலம் ஆணின் நரம்பு மண்டலத்தைவிட வெகு நுட்பமானது.

உறங்கும்போதும் கூட தன்னை இன்னார் தொடுகிறார்  இன்னது தொடுகிறது என்று அவளால் சணத்தில் உணரமுடியும் பெண்ணின் ஹைபோதலமஸின் ஒப்பற்ற நுணுக்கத்தின் ஆசீவாதம் இது.


11வது அடையாளம்

பெண்ணுக்கு ஆணை

விடச் சுருக்கென்று கோபம் வரும்.


12வது அடையாளம்

படுத்த நிலையிலுருந்தோ தரையில் குந்தி அமர்ந்த நிலையிலிருந்தோ பெண்ணால் ஆணைவிட வெகுசீக்கிரமாக எழும்ப முடியும், இவ்வாறு எழும்புவது என்பது அதிக வெப்ப ஆற்றல் கோரும் செயலாகும். ஆணுக்கு மூலாதார வெப்ப ஆற்றல் குறைவு என்பதால் பிற எல்லா இயக்கங்களிலும் பெண்ணைவிட ஆண் (தசை வலிமையால்) வல்லவனே தான் என்றாலும் படுத்தெழுதல் உட்கார்ந்து எழுதல் என்பவற்றில் ஆண் கொஞ்சம் பின் நிலை தான்.


சரி  தொடர்ந்து அடுத்த பதிவில் தெரிந்துகொள்வோம்.....

This notes taken from sithar boomigal in facebook thanks to writer......

English song singers🎤

  Love Story . Taylor Swift · 2008 That's Nasty . Pitbull · 2004 Hit the Floor . Twista · 2005 Big Deal . LeAnn Rimes · 1999 Safe & ...